பாகிஸ்தானில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 5.7 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த அனர்த்தத்தால் 15 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் 200க்கும் அதிகமானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதனை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
