மேலும் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு! முழுமையான விபரம்

கம்பஹா பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 14 பொலிஸ் பிரிவுகளிலும், நீர்கொழும்பு பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அதன்படி களனி வளையத்திற்கு உட்பட்ட ஜா – எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கம்பஹா மாவட்டத்தின் 14 பொலிஸ் பிரிவுகளுக்கு ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, கம்பஹா, கனேமுல்ல, கிரிந்திவெல, தொம்பே, மல்வத்துஹிரிப்பிட்டிய, மீரிகம, நிட்டம்புவ, பூகொட, வேயாங்கொட, மினுவாங்கொட, வீரங்குல, வெலிவேறிய, பல்லேவேல மற்றும் யக்கல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நீர்கொழும்பு வளையத்திற்கு உட்ப்பட்ட திவுலுப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்கும் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டவிதிகளுக்கு அமைவாக அனைவரும் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *