எதிர்வரும் 25ம் திகதி வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சமாசம் பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சமாசத் தலைவர் உதயசங்கர் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊடகஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு அழகக சங்கங்கள் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியுள்ளது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டங்கள் அனைத்திற்கும் கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பாக பூரண ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வழங்கியுள்ளது.
அந்த வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழர்களின் பூர்வீக இன,மத அடையாளங்கள் அழிக்கப்படுவதைக் கண்டித்தும் எதிர்வரும் 25ம் திகதி வடக்கு கிழக்கில் இடம்பெறவுள்ள கடையடைப்பு போராட்டத்திற்கு எமது அழகக சங்கங்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளது என வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சமாசத் தலைவர் உதயசங்கர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்