யாழ் வடக்கு மக்களுக்கு யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளனர். யாழ் உரும்பிராய் பகுதியை சேர்ந்த கதிரவேலு ரகுராம் எனும் நபர் முகநூலில் தன்னை வைத்தியர் என போலியாக விளம்பரம் செய்து வருவதாகவும் , குறிப்பிட்ட நபர் எந்தவித அடிப்படை தகுதியினையோ, அல்லது மருத்துவ கல்வியினையோ கற்கவில்லை என்பதோடு இலங்கையின் எந்தவொரு மருந்துவ சபையிலும் பதிவு செய்யப்படாத ஒருவராவார்.
தான் ஒரு அக்குபஞ்சு வைத்தியர் எனவும், அதிசய சக்தி கொண்டவர், நாடியை கட்டுப்படுத்தி வைத்தியம் செய்பவர் என்றும் பல்வேறு வடிவங்களில் தன்னை விளம்பரப்படுத்தி மக்களிடம் பணமோசடி செய்வதாகவும் எக்காரிட்டுள்ளனர்.
மேலும் மேற்படி நபரின் கருத்துக்கள் விஞ்ஞான ரீதியில் ஆதாரமற்றதும், அடிப்படை அறிவற்றதும் மோசடியானதுமாகும். இவரின் பொய்களை நம்பி இவரிடம் சென்ற பலர் உயிரிழந்து இருப்பதுடன் அண்மையில் இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் மருத்துவமுறைகள் சம்மந்தமாக தவறாக செய்யும் பிரச்சினைகளுக்கு எதிராக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தயாராகி வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நபர் தொடர்பாக யாழ் மக்கள் விழிப்பாக இருப்பதுடன் தங்கள் நோய்களுக்கு சரியான மருத்துவரினை நாடி சிகிச்சை பெறுமாறு யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டு கொள்வதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.