ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் பாம்பின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. அந்தப்படத்தில் கருப்பு பாம்பின் அருகில் ஒளிரும் நகை ஒன்று காணப்படுகிறது. பாம்பின் தலையில் நாகமணி இருப்பதாக குறிப்பிட்டு பலரும் அந்த புகைப்படத்தை செய்தனர்.
இந்தப் புகைப்படங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த புகைப்படங்கள் குறித்து குறிப்பிட்ட சிலர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிவபுராண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்ததாகவும், அங்கு காட்டில் இரவு வெகுநேரம் கழித்து பாம்பு ஒன்று வெளியே வருவதை இரண்டு பேர் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த பாம்பு குறித்தும் நாகமணி குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை.
அந்த புகைப்படம் குறித்து பதிவிட்டுள்ள பலர், நாகமணியுடன் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம் எனக் குறிப்பிட்டுள்ளனர். விஞ்ஞான ரீதியாக, நாகமணி பற்றி பரப்பப்படும் விஷயங்கள் வெறும் வதந்திகள் மட்டுமே. இந்த புகைப்படம் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த படங்கள் எடிட் செய்யப்பட்டிருக்கலாம் என சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
புராணங்களின்படி நாகமணி என்பது நம்பப்படுகிறது. நாகமணி இருக்கிறதா இல்லையா என்பதில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.ஆனால் நாகமணியை உண்மையில் யார் பார்த்தார்கள் என்ற தெளிவு எங்கும் இல்லை. அறிவியலின் கூற்றுப்படி, இது சாத்தியமற்றது. நாகமணி தொடர்பான விஷயங்கள் கற்பனையாக மட்டுமே கருதப்படுகின்றன