நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(10) மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் மாற்றமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 639,082 ரூபாவாக காணப்படுகின்றது. இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 180,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,850 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது