உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
- Advertisement -
புத்தாண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக கூறி, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என ஜகத் குமார கேள்வி எழுப்பினார்.
- Advertisement -
இதற்கு நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை பதிலளித்து உரையாற்றிய அவர், ஊழியர்களுக்கான மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 25 ஆம் திகதிகளுக்கான சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அடிப்படை சம்பளம் 10 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்