காதலனும் வேண்டும் கணவனும் வேண்டும்;பொலிஸாரிடம் மல்லுக்கட்டிய புதுமணப் பெண்!
புதுமணப் பெண் ஒருவர் திருமணமான நிலையில் தனது காதலனையும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ரகளை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசம், சிர்காவ் என்ற கிராமத்தில் பெண் ஒருவருக்கு அவரின் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்துவைத்தனர். எனினும் அப் பெண் ஏற்கெனவே ஒருவரைக் காதலித்த நிலையில், பெற்றோர் பார்த்த மாப்பிளையுடன் திருமணம் ஆனது.
திருமணம் முடிந்தவுடன் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் தன் காதலனுடன் வெளியேற மணக்கோலத்தில் புறப்பட்டு காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு , காதலனுடன் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என மணப்பெண் பொலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தான இருவரையும் திருமணம் செய்துகொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் பொலிஸார் பெண்ணை சமாதானப்படுத்த முயன்றபோது அதனை கேட்காத மணமகள் ஆத்திரத்தில் செல்போனை கீழே போட்டு உடைத்துள்ளார்.
தொடர்ந்து அப்பெண்ணை மீட்டு அவரை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் பொலிஸ்நிலையத்தல் மணப்பெண் ரகளை செய்த காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.