யாழில் இன்று மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில், 24 வயதுடைய இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் அறையினுள் அவர் இவ்வாறு தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்