நேற்று முன்தினம் இரவு யாழிலிருந்த கொழும்பு நோக்கி சென்ற பஸ்சில் யுவதியுடன் இருந்து பயணித்த 59 வயதா முதியவர் பஸ்சில் பிரயாணம் செய்த பயணிகளால் கடுமையாக தாக்கப்பட்டு நடுவழியில் இறக்கி விடப்பட்டார்.
குறித்த முதியவருடன் அமர்ந்து வந்த யுவதி தனது தாய் மற்றும் சகோதரியுடன் கொழும்புக்கு பயணம் செய்துள்ளார். இரு இருக்கைகளிலும் தாயும் சகோதரியும் அமர்ந்திருக்க மற்றைய இருக்கையில் இன்னொரு குடும்பஸ்தர் இருந்ததால் அவருடன் பயணிக்க யுவதி விரும்பவில்லை என தெரியவருகின்றது.
அதே நேரம் தனியே இன்னொரு சீற்றில் அமர்ந்திருந்த முதியவரை குறித்த குடும்பஸ்தருடன் சேர்ந்து இருக்குமாறு நடத்துடன் கோரிய போது முதியவரு அதற்கு சம்மதிக்காது தான் பதிவு செய்த சீற்றிலேயே அமர்வேன் என அடம்பிடித்து இருந்துள்ளார். இதனால் வேறு வழியின்றி முதியவர் இருந்த சீற் அருகிலேயே யுவதியும் இருந்துள்ளார்.
பஸ் வவுனியா தாண்டிச் சென்று கொண்டிருந்த போது தீடீரென யுவதி பெரும் சத்தமிட்டு முதியவரை தாக்கியுள்ளார். அதே நேரம் முதியவரும் யுவதியை தாக்கியதாகத் தெரியவருகின்றது.
உடனடியாக பஸ் நிறுத்தப்பட்டு பயணிகள் இருவரையும் சமாதானப்படுத்த முற்பட்ட போதே முதியவரின் லீலை வெளியாகியுள்ளது. யுவதி நல்ல நித்திரையில் இருந்த சமயம் தனது காற்சட்டை சிப்பை இழுத்துவிட்டு அதனுாடாக யுவதியின் கையை உள்ளே செலுத்து தனது குஞ்சுமணியில் வைத்துள்ளாராம் முதியவர்.
இதனையடுத்தே திடுக்கிட்டு முழித்த யுவதி முதியவரை தாக்கியதாக கூறியுள்ளார். இதனையடுத்து முதியவர் மீது பஸ்சில் பயணம் செய்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. இதனை தடுத்து நிறுத்திய சாரதி பஸ்சை பொலிஸ் நிலையம் கொண்டு செல்ல போவதாக கூறியுள்ளார்.
பொலிஸ் நிலையம் கொண்டு சென்றால் நேரம் போய் விடும் என அனைத்து பயணிகளும் கூறியதால் முதியவரை அங்கேயே இறக்கிவிட்டு பஸ் புறப்பட்டுச் சென்றதாகத் தெரியவருகின்றது.
இதே வேளை தனது ஜீன்ஸ் சிப்பை திறந்து தனது ஜட்டிக்குள் பாதுகாப்பாக வைத்திருந்த பணத்தை யுவதி திருட முற்பட்டதாக முதியவர் கூறினாராம். அவ்வாறு கூறிய பின்னரே முதியவருக்கு அடி கூட விழுந்ததாகத் தெரியவருகின்றது.