கண்டியில் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வாட்ஸ்அப் மூலம் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
- Advertisement -
சிறிது காலம் வாட்ஸ்அப் காதல் நீடித்துள்ளதுடன், சமீபத்தில் குறித்த சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த அம்பலாந்தோட்டை நபர் சிறுமியை ஏமாற்றி கண்டி கெட்டம்பே பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கு சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்தியுள்ளதுடன் பின்னர் அந்நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர் தேடப்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைளக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கண்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்