யாழில் கச்சான் வாங்க வந்த பெண் ஒருவரை வியாபரிகள் புகைபடம் எடுத்த நிலையில் அதனை தட்டிகேட்க சென்ற கணவன் மீதும் வியாபாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்பாணம்- சுன்னாகத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் சுன்னாகம் பகுதிக்கு பெண்னொருவர் தனது கணவருடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இதன் போது பெண் கச்சான் வாங்க சென்றபோது சில வியாபாரிகள் பெண்ணை அநாகரீகமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.
- Advertisement -
இந்நிலையில் அதனை அவதானித்த கணவர் , வியாபாரிகளுடன் முரண்பட்டபோது கணவர் மீது அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.