எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்வாறான வர்த்தகர்களை அடையாளம் காண நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபை விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- Advertisement -
பண்டிகை காலங்களில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி இணையம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற நேரங்களில் மக்கள் எதிர்நோக்கும் முறைகேடுகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், விலை பொறிக்கப்படாமல் உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் உத்தரவை மீறி செயற்படும் அனைத்து வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, பொருட்களை கொள்வனவு செய்யும்போது வர்த்தகர்களால் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரிவிக்குமாறு சபையானது அனைத்து நுகர்வோரையும் கேட்டுக்கொள்கிறது என்றார்