சந்தையில் பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்நாட்டு அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. பதுளை மாவட்டத்தின் நடத்தப்பட்ட தேடுதலில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு அரிசிப் பொதிகளில் இந்த நிலைமை காணப்படுகின்ற போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின் எடையில் எவ்வித வித்தியாசமும் இல்லை என பதுளை மாவட்ட உதவி அளவீட்டு அலகு சேவை அத்தியட்சகர் தெரிவித்தார்.