தொழில் காரணமாக வெளிநாட்டிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பணியகத்தின் இணையத்தள முறைமையின் ஊடாக பதிவு செய்வதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
இதன்படி, www.slbfe.lk என்ற இணையத்தளத்தில் சுய பதிவை (online self registration) அணுகுவதன் மூலம் இந்தப் பதிவை மேற்கொள்ள முடியும் என பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
மேலதிக தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது