கண்டி – பன்விலை நகரில் நேற்று மாலை இம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் 8 வயதுச் சிறுவன் காயமடைந்து கண்டி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மடுல்கலை பிரதேசத்திலிருந்து பன்விலை நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, வீதியை கடக்க முயற்சித்த சிறுவன் மீது மோதியுள்ளது. இததால் படுகாயமடைந்த சிறுவன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை பன்விலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ் வீதியில் பஸ் வண்டிகள் நிறுத்தப்படுவதாலேயே இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் அடிட்கடி இடம்பெற்று வருவதாக போது பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் விபத்து நடந்த இடத்திலேயே தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் வீதியைக் கடந்து பாடசாலைக்குச் செல்லவேண்டியுள்ளதாகவும் எனவே பாதசாரிகள் கடவை ஒன்று அங்கு அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்