குருநாகல் நகரில் விற்பனை செய்யப்பட்டு வந்த 232 போலி லொத்தர் சீட்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
போலி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து குருநாகல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று (25) மாலை திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
- Advertisement -
அங்கு 232 போலி லொத்தர் சீட்டுகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் இன்று (26) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்