சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 06 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.
- Advertisement -
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களும் இப்பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும். இந்த விலை குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்கு வரும் என சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
விலை குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியல்: காய்ந்த மிளகாய் 1கிலோ – ரூ.1,700 ; வெள்ளை அரிசி (உள்நாடு) 1கிலோ – ரூ.169 ; சிவப்பு அரிசி 1 கிலோ – ரூ.179 ; வெள்ளை நாடு (உள்ளூர்) 1கிலோ – ரூ.184 ; சிவப்பு பருப்பு 1கிலோ – ரூ.365 ;கீரி சம்பா 1கிலோ – ரூ.235