யாழ்ப்பாணம் மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
- Advertisement -

வடமாகாண இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணக் கலந்துரையாடல் விளையாட்டு இளைஞர் விவகார அமைச்சர் ரொசான் ரணசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலையில் யாழில் உள்ள வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.
- Advertisement -
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே 50 ஏக்கர் வழங்கப்பட்டிருந்ததாகவும் அதனை நூறு ஏக்கராக அதிகரிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்