கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தாண்டு தினத்தன்று காரைநகர் கசூரினா கடற்கரையில் கனடாவிலிருந்து வந்த இளைஞன் ஒருவரை, இளம் யுவதி ஒருவர் காத்து வெடிக்கும் படி அறைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
- Advertisement -

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கனடாவிலிருந்து யாழிற்கு வருகை தந்த இளைஞன் நண்பர்களுடன் பொழுதை கழிக்க கசூரினா கடற்கரை சென்றுள்ளார். மது அருந்திவிட்டு போதையில் அங்கிருந்த இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளை கூறி வம்புக்கு இழுத்துள்ளார்.
- Advertisement -
ஆத்திரமடைந்த யுவதி, குறித்த நபரை ஓங்கி விட்ட அறையில் நபரின் காது மென்சவ்வு கிழிந்து குருதி வடிந்துள்ளது. அருகில் நின்ற நண்பர்கள் இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இச்செயலை கண்ட மற்றவர்கள், யுவதியின் துணிச்சலை கண்டு பெருமை அடைந்து கருத்துக்கள் கூறியதாக தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.