HomeNewsLocal Newsபுலம்பெயர் அப்பாவிகள் அனுப்பிய கோடிக்கணக்கான பணம்; முதல் குடும்பத்தை உதறி விட்டு கள்ள உறவுடன் குடும்பம்...

புலம்பெயர் அப்பாவிகள் அனுப்பிய கோடிக்கணக்கான பணம்; முதல் குடும்பத்தை உதறி விட்டு கள்ள உறவுடன் குடும்பம் நடத்தி வரும் முன்னாள் போராளி..!

2வது மனைவியுடன் காரில் திரிவதால் கடுப்பான மூத்த மனைவி தனது ஆதங்கத்தை எமக்கு தெரியப்படுத்தியுள்ளார். குறித்த பெண் தனது ஒலிப்பதிவை வெளியிட வேண்டாம் என்று தெரிவித்த காரணத்தால் நாம் அவற்றை வெளியிடவில்லை. அவரது ஆதங்கம் இதுதான்.

யுத்தத்தில் படுகாயமுற்று குடும்பத்தினருடன் மிகவும் கஷ்டப்படும் முன்னாள் போராளி என கூறி 2016ம் ஆண்டு பேஸ்புக்கில் ஒரு வீடியோ வந்துள்ளது. அந்த வீடியோவில் கால்கள் நடக்க இயலாத நிலையில் 3 சில் சைக்கிள் ஒன்றில் இருந்தவாறு 35 வயதான நபர் தனது மனைவி மற்றும் இரு பெண் பிள்ளைகளுடன் இருந்து பேட்டி கொடுத்திருந்தாராம். பேட்டி கொடுக்கும் போது அவர் மிகவும் வறுமை நிலையிலேயே இருந்துள்ளார்.

ஆனால் அவரது கால் தொடையில் செல் துண்டு பாய்ந்திருந்தாலும் அவர் சாதாரணமாக நடக்க கூடிய நிலையில் இருந்தாராம். கடினமான வேலைகள் செய்வதற்குத்தான் சிறிது சிரமப்பட்டுள்ளார். ஆனால் 3 சில்லு சைக்கிளில் திரியும் அவளவுக்கு அவர் காயப்படவில்லை என மனைவி கூறினார். அத்துடன் அவர் போராளி இல்லை என்றும் அவர் விடுதலைப்புலிகளின் எல்லைப்படைக்காக மாதத்தில் சில நாட்கள் சென்று வந்தவர் எனவும் இறுதி யுத்தத்தில் தங்களுடன் இருக்கும் போதே அவருக்கு செல் துண்டுபட்டு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த வீடியோ வந்த பின்னர் அவரது வங்கிக் கணக்குக்கு கருணை உள்ளம் படைத்த புலம்பெயர் தமிழ் அப்பாவி உறவுகள் பணம் அனுப்ப தொடங்கியுள்ளார்கள். ஓரிரு நாட்களுக்குள்ளேயே அவருக்கு 10 லட்சம் பணத்துக்கு மேல் வந்துள்ளதாம். ஓரிரு மாதங்களில் அவரது கணக்குக்கு 2016ம் ஆண்டிலேயே 60 லட்சத்துக்கு மேல் வந்ததாக மூத்த மனைவி கூறுகின்றார். அதன் பின்னர் அவரது போக்கு மாறத்தொடங்கியதாம். தன்னுடனும் பிள்ளைகளுடனும் சந்தோசமாக இருந்த அவர் பணம் வந்தவுடன் தலைகீழாக மாறினாராம்.

கொடிகாமம் பகுதியில் காணி வாங்கி 2017ம் ஆண்டு புதுமணைப்புகுவிழா நடாத்தியிருந்தாலும் தங்களை அங்கு குடியேற அவர் விடவில்லையாம். அந்த வீட்டில் குடியிருந்தால் தமக்கு உதவி கிடைக்காது என கூறி கிளிநொச்சியில் முன்னர் இருந்த கொட்டில் வீட்டிலேயே தன்னையும் இரு பெண் பிள்ளைகளையும் தங்க வைத்திருந்துள்ளார். மூத்த மகளின் பூப்புனித நீராட்டுவிழாவைக் கூட குறித்த கொட்டில் வீட்டிலேயே கொண்டாடியுள்ளார்.

இவ்வாறான நிலையில் கொடிகாமத்தில் கட்டிய நவீன புதுவீட்டை வாடகைக்கு கொடுத்திருந்தாராம். கணவனை இழந்து வாழ்ந்து வந்த மூதாட்டியும் அவரது இரு பெண் பிள்ளைகளும் அந்த வீட்டில் வசித்துள்ளார்கள். அதன் பின்னர் கணவர் பல வர்த்தக நடவடிக்கைகளை செய்து வந்ததுடன் அடிக்கடி யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளார். அவருக்கு பணம் புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்கள்.

இவ்வாறான நிலையில் 2018ம் ஆண்டிலிருந்து தனது வீட்டுக்கு வருவதை கணவர் குறைத்து வந்தாராம். எதற்காக வரவில்லை என கேட்கும் போது ”நான் வியாபாரத்தில் கடும் பிசி… உங்கை எல்லாம் எனக்கு வர நேரமில்லை… ஒருமாதத்துக்கு ஒரு தடவை வாறன்..” என கூறி தொலைபேசியை நிறுத்திவிடுவாராம். தனதும் தனது பிள்ளைகளின் செலவுக்குமாக மாதம் ஒரு தொகையை தனது வங்கியில் கணவர் வைப்பு செய்து வந்தாகவும் அவரது மூத்த மனைவியான பெண் தெரிவித்தார்.

இந் நிலையில் தனது மூத்த மகளுக்கு தமது ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் பாடசாலை சென்று வரும் போது தொல்லை கொடுத்து வந்ததாகவும் அது தொடர்புாக தனது கணவருக்கு தெரியப்படுத்திய போது தனது கணவர் யாழ்ப்பாணத்தில் இருந்தே அடியாட்களை கிளிநொச்சிக்கு அனுப்பி அந்த இளைஞனை அச்சுறுத்தியதாகவும் மனைவி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் தமது கொடிகாமம் வீட்டை பார்க்க தனது கணவருக்கு தெரியாது தானும் தனது இரு பிள்ளைகளும் அங்கு சென்ற போது வீட்டில் வசித்து வந்த மூதாட்டியின் ஒரு மகள் கர்ப்பமான நிலையில் காணப்பட்டாராம். அத்துடன் தாங்கள் வீடு கொடுக்கும் போது அந்த பெண் திருமணம் ஆகாத நிலையில் இருந்ததாகவும் அத்துடன் அவருக்கு கலியாணம் நடந்ததே தெரியாது என்றும் இது தொடர்பாக தான் அந்த இளம் பெண்ணை விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரண்பாடாக கதைத்தாராம். இதனால் தான் சந்தேகமுற்று அங்கு நின்ற போது தனது கணவர் அங்கு வந்து ”எதற்காக இங்கே வந்தாய்” என தன்னை தாக்கியதாக மூத்த மனைவி தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் தான் கணவருடன் சண்டையிட்ட போது அந்த பெண்ணின் கர்ப்பத்துக்கு தனது கணவரே காரணம் என அறிந்து அதிர்ச்சியடைந்ததாகவும் கூறினார் மனைவி. அத்துடன் தனக்கு தெரியாது அந்தப் பெண்ணுக்கு தாலியும் கட்டி வாழ்ந்து வந்துள்ளாராம் கணவர். இவ்வாறான நிலையில் இது தொடர்பாக தான் பொலிசாரிடம் முறையிட ஆயத்தமானபோது, கணவர் அந்த குடும்பம் செய்வினை செய்து தன்னை மயக்கிப் போட்டுதுகள்… தன்னால் அந்த செய்வினையை அகற்ற முடியாது இருக்கின்றது.

அப்படி அகற்ற முற்பட்டால் தான் இறந்துவிடுவேன் என செய்வினை அகற்றுபவர்கள் கூறுகின்றார்கள் என தன்னை நம்ப வைத்து ஏமாற்றி தன்னை சமாளித்து தனது வங்கிக் கணக்குக்கு 25 லட்சம் ரூபா உடனடியாக போட்டு கணவர் தன்னையும் இரு மகள்களையும் கிளிநொச்சியில் கொண்டு வந்து விட்டாராம். தன்னிடம் மன்னிப்பு கேட்டு அழுதாகவும் மூத்த மனைவி கூறினார்.

அதன் பின்னர் வாரத்தில் ஒரு நாள் தங்களுடன் கணவர் வந்து தங்கி நிற்பாராம். தான் கணவருக்கு வைத்த செய்வினையை அகற்ற பல இடங்களுக்கும் சென்று வந்ததாகவும் அந்த சாமியார்கள் கணவரை தங்களிடம் வரச் சொல்லுங்கள் என கூறியும் தான் கணவரை அங்கு வருமாறு கூப்பிட்டாலும் கணவர் வருவதில்லை எனவும் மூத்த மனைவி தெரிவித்தார். இதன் பின்னர் சில காலம் கணவர் வீட்டில் வாரம் ஒரு முறை வந்து போன பின்னர் கொரோனாவுக்கு பின்னர் தம்மிடம் வருவதில்லை எனவும் காசு மட்டும் மாதம் மாதம் அனுப்பி வருவதாகவும் குறிப்பிட்ட மூத்த மனைவி கணவர் 2019 ஆண்டு புது கார் ஒன்றையும் வாங்கி தங்களை ஏற்றிக் கொண்டு வற்றாப்பளை சென்று வந்ததாகவும் அங்கு தனது செய்வினை நீக்க நேர்த்தி வைத்து நடித்ததாகவும் குறிப்பிட்டார்.

கொடிகாமத்தில் உள்ள அந்தப் பெண்ணுக்கு தற்போது இரு பிள்ளைகள் கணவரால் பிறந்துள்ளதாம். அத்துடன் அந்த வீட்டை விட்டு அவர்களை வெளியேற்ற சொல்லியும் தனது கணவர் மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட முரண்பாட்டால் தற்போது தனது கணவர் தனக்கு மாதம் மாதம் பணம் தர மறுப்பதாகவும் மூத்த மனைவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனது கணவருக்கு கிட்டதட்ட 2 கோடி ரூபா அளவில் புலம்பெயர் தமிழர்களால் உதவி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதே வேளை கணவர் நெல்லு மற்றும் கச்சானை வன்னியிலிருந்து மொத்தமாக வாங்கி யாழ்ப்பாணம் மற்றும் வெளியிடங்களுக்கு விற்கும் வியாபாரம் செய்து வருவதாகவும் அந்த வியாபாரத்திற்காகவும் வாகனம் வாங்கியுள்ளார் எனவும் மூத்த மனைவி தெரிவித்துள்ளார்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments