உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டம் அரியானா கிராமத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும், தவாய் குர்த் கிராமத்தின் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கும் திருமணம் முடிவானது.
அதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் விமர்சியாக நடைபெற்றது. இரு வீட்டாரும் தங்கள் உறவினர்களுடன் வந்திருந்தனர். அப்போது பெண்ணொருவர் குழந்தைகளுடன் வந்து மணமகனின் மனைவி என்றும், தனக்கு தெரியாமல் தன் கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
- Advertisement -
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் அங்கு விரைந்தனர். அப்போது நடத்திய விசாரணையில் மணமகன் 5 ஆண்டுகளுக்கு முன்பே குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்றும், இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு உள்ளனர் என்றும் தெரிய வந்தது.
மணமகளின் குடும்பத்தினர் இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து பொலிஸார் இரு தரப்பினரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் இரண்டாவது திருமணம் செய்த பெண்ணை மணமகன் விவாகரத்து செய்ய வேண்டும் என்றும், மணமகனின் இளைய சகோதரரை அப்பெண் திருமணம் செய்ய வேண்டும் என்றும் முடிவானது.
அதனைத் தொடர்ந்து மணமகனின் இளைய சகோதரரை கரம்பிடித்த மணமகள், அவருடன் சென்றுவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது