11 வயது நிரம்பிய பாடசாலை மாணவியின் தலைமுடியை வெட்டியதாகக் கூறப்படும் கணவன் மனைவி தம்பதியினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கஸ்பேவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
- Advertisement -

மாணவியின் தாயாருடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறில் பழிவாங்கும் நோக்கில் இது மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- Advertisement -
குறித்த மாணவியின் தாயாரை தேடிச் சென்ற கணவனும் மனைவியும் சிறுமி மட்டும் வீட்டில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர் சிறுமியிடம் அவரது தாயைப் பற்றி விசாரித்து, அவர் வீட்டில் இல்லை என்று கூறியதையடுத்து, தம்பதியினர் சிறுமியைப் பிடித்து தலைமுடியை வெட்டியுள்ளனர் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.

தாய் வீட்டுக்கு வந்ததும், வெட்டிய தலைமுடியைக் காட்டி, நடந்ததை சிறுமி தெரிவித்துள்ளார். தாயும், சிறுமியும் வெட்டிய தலைமுடியை பையில் வைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்று முறைப்பாடு அளித்தனர்.
சிறுமியின் வாக்குமூலத்தின்படி, சந்தேகத்திற்குரிய கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்கள் இருவரும் கஸ்பேவ காவல்பிரிவில் வசிப்பவர்கள். நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக வெட்டப்பட்ட முடிகளும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன.