கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த 35 வயதான குடும்பப் பெண் கர்ப்பத்தைக் கலைக்க முற்பட்டு யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை அந்த வைத்தியசாலையில் கடமைக்கு வரும் மகப்பேற்று நிபுணர் சட்ட நடவடிக்கைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்காது சிகிச்சை அளித்து தங்க வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
குறித்த குடும்பப் பெண்ணின் கணவர் மத்தியகிழக்கு நாடு ஒன்றில் பணியாற்றுவதாகவும் அவரது கர்ப்பத்திற்கு பெண்ணின் அக்காவின் மகளைக் காதலித்து வந்த இளைஞனே காரணம் எனவும் வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.
- Advertisement -
குறித்த பெண் கர்ப்பம் கலைக்க முற்பட்டு யாழ் வைத்தியசாலையில் அனுமதித்தவர் மாணவியின் காதலன் எனவும் இது தொடர்பாக குறித்த பல்கலைக்கழக மாணவியும் மாணவியின் தாயாரும் தனியார் வைத்தியசாலையில் வந்து காதலன் மற்றும் தனது சித்தியுடன் கடுமையாக முரன்பட்டதாகவும் தெரியவருகின்றது. அத்துடன் அங்கு கடமையில் நின்ற தாதியையும் தாக்கியதாகவும் ஆனால் வைத்தியசாலை நிர்வாகம் இதனை மூடிமறைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.