சிங்கள பாட நெறியை பூர்த்தி செய்த ஆசிரியர்களை வடமாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கான மேலதிக பயிற்சி வடமாகாண ஆளுநரின் மேற்பார்வையில் ஆளுநர் கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- Advertisement -

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இந்து பௌத்த பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ் இராமச்சந்திரன்,
- Advertisement -
வட மாகாணத்தில் இந்து பௌத்த பேரவையினால் நடத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை பூர்த்தி செய்தவர்களில் சுமார் நாற்பது போர் இரண்டு வருடங்களாக வட மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்களாக பயிற்சி பெற்றுள்ளனர்.

இவர்களை அரச பாடசாலைகளில் பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்காக இலங்கை கல்வி அமைச்சருடனும் வடமாகாண ஆளுநரிடமும் ஏற்கனவே பேச்சுக்களை நடத்தியுள்ளோம்.
அதன் அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்களை நிரந்தரமாக ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்காக மேலதிக பயிற்சி அளிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுபவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்