யாழ்ப்பாணத்தில் உள்ள வீடு ஒன்றின் மீது தென்னை மரம் சரிந்ததில் வீடு பகுதி அளவில் சேதமாக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

இந்த சம்பவம் அனலைதீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மார்கண்டு என்பவருடைய வீட்டிலேயே நேற்றைய தினம் (06-01-2023) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இருப்பினும், குறித்த வீட்டில் இருந்தவர்களுக்கு தெய்வாதீனமாகப் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை