ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் அந்த ஹொட்டலின் பணியாளரை தாக்கியுள்ளார். மாத்தறை பகுதியில் வசிக்கும் பெண்ணும் அவரது நண்பர்கள் குழுவும் அன்று ஹோட்டலில் தங்கியிருந்தனர் .

இந் நிலையில், ரிக்ரொக் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஹொட்டல் பணியாளரை அழைத்து நடனமாடச் சொன்னார்.
ஆனால் அவர் அதை மறுத்துவிட்டதனால் கோபமடைந்த அந்த பெண் பணியாளரை தாக்கியுள்ளதுடன் , அவர் கையில் இருந்த பருப்பு பாத்திரத்தை அவர் முகத்தில் வீசினார். அதன்பின்னர் இந்த தகராறு நீண்டு செல்லாமல் பின்னர் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது