கொழும்பில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்விகற்கும் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக வங்கி முகாமையாளர் ஒருவரை பம்பலப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அத்தோடு, சிறுமி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மனைவி உயிரிழந்துள்ளதாகவும் அவர் 13 மற்றும் 17 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணையில் குறித்த 14 வயது சிறுமி கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.