யாழ்ப்பாணம் அம்மன் வீதியில் மோட்டார்சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் நல்லூரைச் சேர்ந்த 49 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
- Advertisement -

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை இன்று காலை வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.
- Advertisement -
இதன்போது டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.