HomeNewsLocal Newsயாழில் உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திருப்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழில் உறவினர் வீட்டிற்கு சென்று வீடு திருப்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.

குறித்த திருட்டு சம்பவம் இன்றையதினம் (19-10-2022) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த வீட்டில் இரண்டு வயோதிப பெண்கள் வசித்துவந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

மட்டக்களப்பு சென்றவர்கள் இன்றையதினம் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தவேளை 2 தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட மேலும் பல இலத்திரனியல் உபகரணங்கள் களவாடப்பட்டமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments