உலக சிறுவர் தினம் மற்றும் முதியோர் தினத்தனை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இலவசமாக விலங்கியல் சாலைகளுக்குள் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மகிந்த அமரவீரவிற்கும் தேசிய விலங்கியல் பூங்காத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடலில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விலங்கியல் சாலைகளையும் சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் இலவசமாக பார்வையிட்டு பயன்பெறமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிறுவர்களுக்காக அனைத்து விலங்கியல் சாலைகளிலும் பல்வேறு கல்வி நலன் திட்டங்கள் நாளைய தினம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.