திருமண பந்தத்தில் இணைந்து 60 வருடங்களாகச் சிறந்த புரிந்துணர்வுடன் இணைபிரியாமல் வாழ்ந்த தம்பதியினர் மரணத்திலும் பிரியாமல் ஒன்றாக உயிரிழந்த சம்பவம் கண்டி – குருதெனிய, தம்பவெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஆர்.ஏ.எஸ். ரணசிங்க (வயது – 88), அவரது மனைவியான ஏ.ஜி. பண்டாரநாயக்க ( வயது – 81) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -
ரணசிங்க நேற்றுமுன்தினம காலையில் உயிரிழந்துள்ளார். கணவரின் பிரிவால் கவலையுற்றிருந்த மனைவியின் உயிரும் ஓரிரு மணிநேரத்துக்குப் பின்னர் பிரிந்துள்ளது.
இந்தத் தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகளும், 11 பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.