சிகரெட் ஒன்றின் விலையை அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 4 குழுக்களின் அடிப்படையில் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
- Advertisement -
இதன்படி, சிகரெட் ஒன்றின் விலையை 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
வெட் வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.