நேற்றையதினம், நண்பனின் வீட்டுக்கு வந்து கதிரையில் அமர்ந்தவர் திடீரென மயங்கி சரித்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த பாலசுப்பிரமணியம் ஐயர் கணநாதசர்மா (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
- Advertisement -

குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்துள்ளார்.
- Advertisement -
மேலும், உடனடியாக வீட்டார் அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் அறிக்கையிட்டனர்.