அத்தியாவசியமற்ற அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை கட்டுப்படுத்துமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஓகஸ்ட் 24ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து சிக்கல்களை கருத்திற்கொண்டு கடந்த ஜூலை 24ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் ஒரு மாத காலத்திற்கு குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அத்தியாவசிய பொது சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஊழியர்கள் மாத்திரமே அலுவலக கடமைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அலுவலகத்திற்கு உள்வாங்கப்படும் பணியாளர்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் முன்னெடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தலைவருக்கு காணப்படுவதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.