கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் பணம் 50% குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
- Advertisement -

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை, வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 1,889.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
- Advertisement -
மேலும், ஜூலை மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இதன்படி, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த நாட்டிற்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பப்படும் தொகை 50% குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.