வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி மற்றும் டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக விண்ணப்பித்தவர்களது விண்ணப்பங்களின் பிரகாரம் நேர்முகத்தேர்வுப் பரீட்சைக்கு தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரிகளது பெயர் விபரங்கள் 08.08.2022 ஆம் திகதி வடக்கு மாகாண கல்வி அமைச்சினுடைய இணையத்தளமான www.edumin.np.gov.lk இல் வெளியிடப்பட்டிருந்தது.
- Advertisement -

இருப்பினும் தவிர்க்க முடியாத நிலைமைகள் காரணமாக 16.08.2022 தொடக்கம் 23.08.2022 வரையான காலப்பகுதிகளில் நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்படுகின்றன.
- Advertisement -
இவ் நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ள திகதிகள் தொடர்பில் பின்னர் அறிவித்தல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 021 2231343