யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அடுத்தவாரம் சென்னைக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வட மாகாணத்தின் பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.
- Advertisement -
அத்தோடு, யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை விமான நிலையத்திற்கும் விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
- Advertisement -
கொரோனா காலப்பகுதில் இருந்து குறித்த விமான சேவைகள் நீண்ட நாட்களாக தடைப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை விரைவில் செயற்படுத்துமாறு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.