சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றையதினம் கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இவ்வாறான நிலையில் சர்வகட்சி வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு தயார் என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விரைவில் ரணில் தலைமையிலான சர்வ கட்சி அரசாங்கத்ததுடன் விக்னேஸ்வரனும் இணைய வாய்ப்புள்ளதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.