பிரான்ஸ் செல்லவுள்ளோருக்கு அந்நாடு மகிழ்ச்சியான அறிவிப்பை விடுத்துள்ளது. இதன்படி ஓகஸ்ட் முதலாம் திகதி முதல்அனைவருக்கும் கொவிட் தொடர்பான அனைத்துப் பயணக் கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- Advertisement -
அனைத்துப் பயணிகளும், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இனி தடுப்பூசி பெற்றதற்கான, அல்லது கொரோனாவிலிருந்து விடுபட்டதற்கான ஆதாரத்தையோ, அல்லது கொவிட் பரிசோதனை செய்துகொண்டதற்கான ஆதாரத்தையோ பிரான்சுக்குள் நுழையும் முன் சமர்ப்பிக்கவேண்டியதில்லை.
- Advertisement -
மேலும், அவர்கள் என்ன காரணத்துக்காக வேண்டுமானாலும் பிரான்சுக்கு வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது