தங்காலை ஹேனகடுவ பிரதேசத்தில் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதியதில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -

விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய லலித் சுஜீவ மற்றும் 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சுரேஷ் உதயங்க ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
- Advertisement -
விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையிலும் மற்றைய இருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
