ஜனாதிபதி மாளிகையில் உள்ள Wi-Fi ஐ பயன்படுத்தி சந்தேகத்துக்கிடமான முறையில் இணையத்தில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட பலர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- Advertisement -

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய பின்னர் இணையத்தை பயன்படுத்தி இவர்கள் அழைப்புகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -
பொலிஸார் தற்போது தொலைபேசி தரவு பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து அங்கிருந்த உடைமைகளுக்கு சேதமுற்படுத்திய 100க்கும் மேற்பட்டவர்களின் கைரேகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அந்த கைரேகைகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிது.