எரிபொருள் விநியோகம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒகஸ்ட் 1ஆம் திகதி முதல் நாடு முழுவதும் QR முறை நடைமுறைப்படுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி இலக்க அடிப்படையிலான இலக்கத் தகடு முறை, டோக்கன்கள் மற்றும் இதுவரை செயல்பாட்டில் உள்ள பிற முறைகள் குறித்த திகதியின் பின்னர் செல்லாது என்றும், அதற்குப் பதிலாக QR குறியீடு மற்றும் கோட்டா முறை முன்னெடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
QR முறையை பின்பற்றும் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட எரிபொருள் இருப்புகளிலிருந்து, QR குறியீட்டைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் எரிபொருள் விநியோகத்தைக் கண்காணித்து எதிர்காலத்திலும் விநியோகம் முன்னெடுக்கப்படும்.