HomeNewsLocal Newsநண்பனுடன் கையும் களவுமாக அகப்பட்ட மனைவி: மரத்தில் கட்டி வைத்து மரண அடி கொடுத்த கணவர்!

நண்பனுடன் கையும் களவுமாக அகப்பட்ட மனைவி: மரத்தில் கட்டி வைத்து மரண அடி கொடுத்த கணவர்!

இராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய வழக்கில் கணவர் உட்பட 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது நண்பனுடன் மனைவியை கண்ட கணவர் அவரை மரத்தில் கட்டி வைத்து இரக்கமில்லாமல் தாக்கிய நிலையில் அவரது நண்பனையும் மரத்தில் கட்டி வைத்து உறவினர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுமார் 7 மணி நேரம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் வலியால் அலறித்துடித்த காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments