HomeNewsLocal Newsபுலம்பெயர்ந்தவர்களுக்கு கனடாவில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள் – அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்

புலம்பெயர்ந்தவர்களுக்கு கனடாவில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகள் – அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்

கனடாவின் பிரபல பத்து நகரங்களில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்களால் புலம் பெயர்ந்தவர்களை கட்டாயம் உள்ளீர்க்க வேண்டிய நிலையில் அந்த நாடு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டவர்களில் பலர் ஓய்வு பெற உள்ளதே ஆகும்.

அதை ஊர்ஜிதம் செய்வதுபோல், கனேடிய புலம்பெயர்தல் அமைச்சரான Sean Fraser, நமது சமுதாயங்களுக்கு உதவும் வகையில், நாம் தொடர்ந்து வரலாறு காணாத அளவிலான புலம்பெயர்வோரை வரவேற்க இருக்கிறோம் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ட்போர்ட் (Brantford), Ottawa, கெலோனா (Kelowna). கியூபெக், கால்கரி, சாஸ்கட்டூன், அபார்ட்ஸ்போர்ட், ஹாலிஃபாக்ஸ், விக்டோரியா மற்றும் ரொறன்ரோஆகிய நகரங்களில் அதிக பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன.

பெடரல் திறன்மிகுப் பணியாளர்கள் திட்டம் (Federal Skilled Worker – FSW), பெடரல் திறன்மிகு வர்த்தக திட்டம் (Federal Skilled Trades – FST) மற்றும் கனடா அனுபவ வகுப்பு (Canada Experience Class – CEC) ஆகிய மூன்று திட்டங்களும்தான் கனடாவில் பொருளாதாரப் புலம்பெயர்வோர் பணிக்கு விண்ணப்பிக்கப் பொருத்தமான திட்டங்கள் ஆகும். இவை அனைத்துமே எக்ஸ்பிரஸ் நுழைவைத்தான் பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொழில்துறை (industrial, எலக்ட்ரிக்கல் மற்றும் கட்டுமானத்துறைகள், பராமரிப்பு மற்றும் உபகரணங்கள் பயன்பாட்டு வர்த்தகம், இயற்கை வளங்களில் தொழில்நுட்பப் பணிகள், விவசாயம் மற்றும் அது தொடர்பான உற்பத்தி, பதப்படுத்தல், தயாரிப்பு மற்றும் பயன்பாட்டு மேற்பார்வையாளர்கள் மற்றும் மத்திய கட்டுப்பாட்டு இயக்குனர்கள் ஆகிய பணிகள் அதிகம் காலியாக உள்ளன.

மேலும் உணவுக்கலை நிபுணர்கள், சமையல்காரர்கள் மற்றும் கேக் தயாரிப்போர் முதலான பணியிடங்களும் காலியாக உள்ளன.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments