கம்பஹா நீதிமன்ற வளாகம் அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் கடந்த 27 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகம் அருகில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா நீதிமன்ற வளாகம் அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பலனின்றி பாதாள குழு உறுப்பினர் பஸ் பொட்டா உட்பட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.