யாழ் சித்தங்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தற்போது எரிபொருள் விநியோகம் நடைபெறுகின்றது. இதேவேளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பணிக்கு சென்றபோதிலும் சங்கானை ப. நோ.சங்க நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
தாம் எரிபொருள் அட்டையில் பதிவு செய்து அனுப்புவார்கள் எனவும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை மேற்பார்வை மட்டும் செய்யுமாறு தாம் கேட்டுக்கொண்டதாகவும் ப.நோ.கூ சங்க நிர்வாகம் தெரிவித்தது.
- Advertisement -
எனினும் ஏனைய இடங்களில் நடைபெறுவதைப் போல தாம் எரிபொருள் அட்டை பரிசீலணையில் ஈடுபடுவார்கள் என பிரதேச செயலகம் கூறியதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ப.நோ.கூ சங்கம் தெரிவித்தது.
இதனால் பிரதேச செயலக உத்தியோகத்தர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.இதேவேளை, எரிபொருள் விநியோகிக்கக்கூடிய மூன்று பம்பிகள் இருக்கின்ற போதிலும் தற்போதுவரை {1 மணிநேரமாக} இரு பம்பிகளிலேயே விநியோகம் இடம்பெற்று வருகின்றது.
எரிபொருள் விநியோகம் தொடர்பாக ப.நோ.கூ சங்கம் நேற்று ஒட்டி இருந்த அறிவித்தல் பலகையில் அரச உத்தியோகத்தர்களுக்கு தனியான வரிசை என குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
இதனால் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் ஒரே வரிசையிலே காத்திருந்தனர். எனினும் இன்று காலை அரச உத்தியோகத்தர்களுக்கு தனியான வரிசை என துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டமையால் காலையில் வந்த அரச உத்தியோகத்தர்கள் தனியான வேலை செய் ஒன்றை தயார்படுத்தினர்.
இதனால் நேற்று மதியத்தில் இருந்து ஒரே வரிசையில் காத்திருந்த அரச உத்தியோகத்தர்கள் குழப்பமடைந்தனர்.
புதிய வரிசைக்கு எரிபொருள் விநியோகிக்க தாம் அனுமதிக்க மாட்டார்கள் என அவர்கள் கூறியதை அடுத்து புதிய வரிசையில் இருந்த அரச ஊழியர்களுக்கு இரண்டு மணி நேரங்களின் பின்னர் எரிபொருள் விநியோகிக்கப்படும் என சங்கத்தால் தெரிவிக்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிட்டத்தக்கது.
இதனால் மூன்றாவது பம்பியில் சுமார் ஒரு மணித்தியாலமாக எரிபொருள் விநியோகிக்கப்படாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.