ஆர்மேனியாவின் யெரெவன் நகரில் நடைபெற்ற சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட மாணவர் ஹர்ஷன் அருண்மொழி வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- Advertisement -
இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவராவார்.
- Advertisement -

64 நாடுகள் பங்குபற்றிய இந்தப் போட்டிக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு மாணவர்கள் தகுதி பெற்றிருந்ததுடன், ஜூலை 10 முதல் 18 வரை நடைபெற்ற இப்போட்டியானது நடைமுறை மற்றும் கோட்பாட்டு ரீதியிலான இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது.
பலாங்கொடை ஆனந்த மைத்திரி கல்லூரியைச் சேர்ந்த பிரவீன் தென்னகோன், கண்டி மகாமாயா பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த சிலுனி விக்ரமதிலக, கொழும்பு டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயத்தைச் சேர்ந்த கார்த்திக் பிரவீன் ஆகியோர் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் கலந்துகொண்ட ஏனைய மாணவர்களாவர்.
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிரான் அமரசேகர மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் பேராசிரியர் எம்.ஜயந்த விஜேரத்ன ஆகியோரும் போட்டியின் சிறப்பு ஜூரி உறுப்பினர்களாக கலந்து கொண்டனர்.

உயிரியல் பிரிவில் 2021 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கிடையில் இலங்கை உயிரியல் நிறுவனம் நடத்திய போட்டியின் பின்னர் சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த இந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.