முதலாவது டீசல் கப்பல் இன்று (16) அதிகாலை கொழும்பு வந்தடைந்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
குறித்த டீசலின் தரத்தை பரிசீலிப்பது தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
- Advertisement -
இதேவேளை, மற்றுமொரு டீசல் கப்பல் இன்றையதினம் (16) நாட்டை வந்தடையவுள்ளதாகவும், இதே நடைமுறை பின்பற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி முதலாவது பெற்றோல் கப்பல் ஜூலை 18-19ஆம் திகதி வந்தடைடயவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த 3 கப்பலுக்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, தேசிய எரிபொருள் அட்டை இன்று (16) அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இலங்கை தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆதரவுடன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சினால் இந்த தேசிய எரிபொருள் அட்டை இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
அதற்கமைய, வாராந்தம் உறுதிப்படுத்தப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஒரு தேசிய அடையாள அட்டைக்கு ஒரு வாகனத்திற்கு எரிபொருள், வாகன அடிச்சட்ட இலக்கம் உள்ளிட்ட விபரங்கள் சரிபார்க்கப்பட்டு QR குறியீடு ஒதுக்கப்படும். வாகன இலக்கத்தகட்டின் கடைசி இலக்கத்தின்படி வாரத்தில் 2 நாட்களுக்கு எரிபொருள் விநியோகம்