இருதய நோயாளர்களுக்கான மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை கூறியுள்ளார். மருந்துகள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் நோயாளிகளுக்கு உணவு விநியோகத்தை மேற்கொண்டவர்களுக்கு 04 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதங்களை சுகாதார அமைச்சு பகிரங்கப்படுத்திய போதிலும், டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என இந்த கலந்துரையாடலின் போது தெரியவந்துள்ளது.